விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, அதன் இடது சக்கரம், இடது என்ஜின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயிற்சிப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம் ஒன்று, பட்ட நூலில் சிக்கியதால், அவசரமாகத் தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, விமானம் ஆபத்தான சூழலை எதிர்கொண்ட போதிலும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, அதன் இடது சக்கரம், இடது என்ஜின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
இத்தகைய நூல்கள் மற்றும் வான்வழிக் கழிவுகள், விமானத்தின் என்ஜின்கள் மற்றும் அத்தியாவசிய கட்டுப்பாட்டு அமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதுடன், பயணிகள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என விமானப்படை எச்சரித்துள்ளது.
விமானப்படை பின்வரும் பகுதிகளை அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் கண்டுள்ளது:
கட்டுநாயக்க
ரத்மலானை
ஹிங்குராக்கொடை
சீனா விரிகுடா (China Bay)
அனுராதபுரம்
பலாலி
கட்டுக்குருந்த
கொக்கலை
வவுனியா
வீரவில
மத்தள
எனவே, விமானப் பாதுகாப்பைப் பேணுவதற்காக, விமான நிலையங்கள் மற்றும் விமானப் பாதைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு, இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

