கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள மாகந்தன பல்பொருள் அங்காடிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் மூன்று பென்டன்களை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சி சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
ரூ.5 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான 2.5 பவுன் தங்கநகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண், பல்பொருள் அங்காடிக்கு சென்று வீதிக்கு வந்து முச்சக்கரவண்டிக்காக காத்திருந்த போதே அவர் அருகில் நின்றிருந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், திடீரென அவரது கழுத்திலிருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
குறித்த மோட்டார் சைக்கிள் றட்டுவை பிரதேசத்தில் பெண்ணொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், கடந்த 10ஆம் திகதி இரவு எகொடவீர பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பட்டப்பகலில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு appeared first on Thinakaran.
