Last Updated:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் 2026-27 மத்திய பட்ஜெட் அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்து பிரபல பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2026 -27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
நிதி ஆயோக் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம், பொருளாதார நிபுணர்கள், துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.


