• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பட்ஜெட் தாக்குதலுக்கு தயாரான மத்திய அரசு… மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பட்ஜெட் தாக்குதலுக்கு தயாரான மத்திய அரசு… மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 3:13 PM IST

Budget 2025| 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கை எதிர்பார்க்கின்றனர்.

X

மத்திய

மத்திய பட்ஜெட் –
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன..

2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கை எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மீனவர்கள் கோரிக்கை வைத்த எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இந்த முறை தங்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த பட்ஜெட்டில் மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-

ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.6 லட்சம் வழங்குகிறது. மத்திய அரசு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். இதனை ராமேஸ்வரம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களிடம் தெரிவித்ததை நிறைவேற்றப்பட வேண்டும்.

மீன்பிடி உபகரணங்களான வலை, கயிறு, விசைப்படகுகளுக்கான பொருட்கள் என அனைத்திற்கும் 18% GST செலுத்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.

மாதந்தோறும் விசைப்படகு ஒன்றிற்கு 1,900 லிட்டர் மானிய டீசல் தமிழக அரசு வழங்குவதை போல், மத்திய அரசு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். இயற்கையோடு போராடி மீன்பிடித்து வருவதால் உற்பத்தி விலைக்கு டீசல் வழங்கினால் தான் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ரூ.8000 வழங்குவதை போல் மத்திய அரசும் வழங்க வேண்டும். மேலும், தடைக்காலத்தில் விசைப்படகுகளை பராமரிக்க ரூ.5 லட்சம் வரையிலும் செலவாகிறது. இதற்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி கிடைக்க வேண்டும்.

மீன் வியாபாரிகளிடம் இருந்து உரிய விலை கிடைப்பது இல்லை. விற்பனை ஆகாமல் குறைவான விலைக்கு செல்வதை தடுக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆழ்கடல் விசைப்படகிற்கு ரூ.40 லட்சம் மானியம் வழங்குவதற்கு பதிலாக ரூ.80 லட்சம் வழங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க வேண்டும். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், குந்துகால், மூக்கையூர் ஆகிய இடங்களில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவ பெண்களுக்கு கடல்பாசி வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு போன்று சுய தொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வந்து இந்த தொழில்களுக்கான கடனுதவி மானியத்துடன் வழங்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

First Published :

January 30, 2025 3:13 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Budget 2025: பட்ஜெட் தாக்குதலுக்கு தயாரான மத்திய அரசு… ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன

Read More

Previous Post

Usman Khawaja: டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக வயதில் இரட்டை சதம் விளாசிய 2வது ஆஸி., கிரிக்கெட் வீரர்!

Next Post

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு | 18 bodies recovered from river american passenger plane helicopter collision

Next Post
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு | 18 bodies recovered from river american passenger plane helicopter collision

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் - பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு | 18 bodies recovered from river american passenger plane helicopter collision

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin