Last Updated:
கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் செவ்வாயன்று நடைபெறகிறது
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசு தலைவர் தனது உரையில், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றமே அரசின் முக்கிய நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.
நாட்டின் தேசபக்தி கீதமான “வந்தே மாதரம்” இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இதையொட்டி நாடு முழுவதும் பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இது இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக அமைந்தது என்று குடியரசு தலைவர் பெருமை படத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2047-க்குள் இந்தியாவை ஒரு “வளர்ந்த நாடாக” மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையை அரசு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா அடைந்த அதிவேகப் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது என்று கூறினார்.
இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், 2 ஆம் கட்ட அமர்வு மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரையும் நடைபெறவுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய குடியரசு தலைவர்.. அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு பாராட்டு


