மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த பட்ஜெட்டில், 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், கோவிட்-19 காலகட்டத்தின் 18 மாத நிலுவைத் தொகையை விடுவிப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை, மத்திய அரசு ஊழியர் சங்கம், அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ளது.
சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பானது, அமைச்சரவை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், பட்ஜெட் 2024க்கு முன்னதாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
1. 8 ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
2. புதிய பென்ஷன் திட்டத்தை (NPS) உடனடியாக ரத்து செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும்.
இதையும் படிக்க:
Budget 2024 : வரி மாற்றங்கள், ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பு.. பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?
3. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாதத்திற்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும், தற்போதுள்ள 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் மாற்றியமைக்கப்பட்ட பலன்களை வழங்கிட வேண்டும்.
4. கருணை நியமனங்கள் மீதான 5 சதவீத உச்சவரம்பை நீக்கி, இறந்த பணியாளரின் அனைத்து வார்டுகள்/ சார்ந்திருப்பவர்களுக்கு கருணை நியமனம் வழங்க வேண்டும்.
5. அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியாளர்களின் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்ததாரரை நிறுத்த வேண்டும்.
6. ஜேசிஎம் பொறிமுறையின் விதிகளின்படி சங்கம்/கூட்டமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள சங்கங்கள்/ கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், தபால் குழு C யூனியன், NFPE, ISROSA ஆகியவற்றின் அங்கீகாரம் நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். சேவை சங்கம்/ கூட்டமைப்புகள் மீது விதி 15 1(c) விதிப்பதை நிறுத்து வேண்டும்.
7. சாதாரண, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் GDS ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும், மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 19 ஆம் தேதி மதிய உணவு நேரத்தில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ் பி யாதவ் கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
