Last Updated:
சவ்ரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் மற்றும் அவரது மனைவி புரியில் படகு விபத்தில் சிக்கி மீட்கப்பட்டனர். ஸ்னேஹாசிஷ் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர்.
சவ்ரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் மற்றும் அவரது மனைவி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கினர்.
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமாக பதவி வகித்தவர் சவ்ரவ் கங்குலி. இவரது சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி. இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருப்பவர். இந்நிலையில், இவர் தனது மனைவி அர்பிதாவுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலம் புரி கடல் பகுதியில் அதிவேகமாக செல்லும் படகில் சவாரி சென்றார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகில் இருந்த இருவரும் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரையும் உள்ளூர் மக்கள் போராடி மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தாமும் தனது மனைவியும் காப்பாற்றப்பட்டதாக ஸ்னேஹாசிஷ் கங்குலி உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனிடையே இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


