கோலாலம்பூர்:
கிளந்தான், பச்சோக்கில் உள்ள கம்போங் சுங்கை பகுதியில், 85 வயதுடைய பிதா சுலோங் என்ற மூதாட்டி, புதர்கள் நிறைந்த தனது வீட்டின் பின்புறத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் சுமார் 3:00 மணியளவில் மூதாட்டியின் மகள் அவரைத் தேடிச் சென்றபோது இச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வழக்கமாக வீட்டின் முன் வேலியில் தொங்கவிடப்படும் உணவுப் பார்சல், காலை 10:30 மணியாகியும் எடுக்கப்படாமல் இருந்ததால், மூதாட்டியின் மூத்த மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டைச் சுற்றிலும் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள அடர்ந்த புதருக்குள், வெட்டப்பட்ட புற்கள் மற்றும் கத்தரிக்கோலுடன் மூதாட்டி சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
உயிரிழந்த மூதாட்டிக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதப் பாதிப்பு இருந்ததாக அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரண்டன் முகமது இஸ்மாயில் ஜமாலுதீன் உறுதிப்படுத்தியுள்ளார். மூதாட்டியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பச்சோக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



