Last Updated:
“தடுப்பூசியை நிறுத்தியதால் இனி வரும் நாட்களில் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுவர். அதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம், சுகாதாரத்துறை அமைச்சர் ராபர்ட் கென்னடியும்தான் பொறுப்பேற்க வேண்டும்” – மருத்துவர்கள் எச்சரிக்கை.
அமெரிக்காவில், ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை பிறந்த குழந்தைகளுக்கு செலுத்துவது கட்டாயம் இல்லை என அந்நாட்டு தடுப்பூசி ஆலோசனை குழு தெரிவித்துள்ளது. கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளை தடுக்க உலக சுகாதார மையத்தால் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசிகள் குழந்தை பிறந்து, 72 மணி நேரத்துக்குள் செலுத்தப்படும். இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை இனி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு செலுத்துவது கட்டாயம் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் கென்னடி தலைமையிலான தடுப்பூசி ஆலோசனை குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் இந்த தடுப்பூசியை செலுத்த விரும்புவோருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் நிறைய குழந்தைகள் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்படுவர் என்றும், அதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம், சுகாதாரத்துறை அமைச்சர் ராபர்ட் கென்னடியும்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
December 07, 2025 1:39 PM IST
“பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி கட்டாயமல்ல” – அமெரிக்க அரசின் அறிவிப்பால் சலசலப்பு!


