
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மாத்தறை பிரவுன்ஸ் ஹில் காணிப்பகுதி, கொள்வனவுக்கான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக FCID நீதிமன்றில் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பகுதியில் அமைந்துள்ள ‘பிரவுன்ஸ் ஹில்’ (Brown’s Hill) காணியின் ஒரு பகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு (FCID) மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த காணியானது எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களையோ அல்லது அதற்கான நிதி ஆதாரங்களையோ உரிய முறையில் நிரூபிக்கத் தவறியதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

