• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பசியால் துடித்த பச்சிளம் குழந்தை… எரிகிற அடுப்பில் வீசிக் கொன்ற தாய்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பசியால் துடித்த பச்சிளம் குழந்தை… எரிகிற அடுப்பில் வீசிக் கொன்ற தாய்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 25, 2026 8:50 PM IST

பசியால் துடித்த இரண்டு மாத பச்சிளம் குழந்தையின் வாயைத் துணியால் அடைத்து, கை கால்களைக் கட்டி பெற்ற தாயே அடுப்பில் தூக்கி வீசி எரித்துக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் குலைநடுங்க வைத்துள்ளது.

Rapid Read
தெலங்கானா
தெலங்கானா

தெலங்கானாவில் பச்சிளம் குழந்தையைப் பெற்ற தாயே விறகு அடுப்பில் போட்டு எரித்துக் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பசியால் அழுது துடித்த பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாகக் கொன்றதன் பகீர் பின்னணி என்ன?

கடும் பசியால் அழுத இரண்டு மாத ஆண் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு பதிலாக, கொடூர மனம் படைத்த இளம்பெண் வாயில் துணியை வைத்து மூச்சுத் திணறச் செய்தது பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் போராடி உதைத்த பிஞ்சுக் கால்களைக் கட்டி, அடுப்பில் தூக்கிப் போட்ட சம்பவம் இதயங்களை நொறுங்கச் செய்துள்ளது. நினைத்துப் பார்க்கவே ஈரக்குலை நடுங்கும் செயலில் கல் நெஞ்சம் படைத்த பெண் ஈடுபட்டது ஏன்? நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் 21 வயதான ராஜேந்திரா. இவர், 20 வயதான மமதா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்ட தம்பதி வேலை தேடி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு வந்தது. இருவரும் ஐதராபாத்தில் திண்டிகல் பகுதியில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வேலை செய்த கட்டடத்தின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்களது குழந்தையுடன் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று ராஜேந்திரா வேலைக்குச் சென்றுள்ளார். பிற்பகலில் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் விறகு அடுப்பில் தனது குழந்தை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அதைப் பார்த்தபடியே தனது மனைவி பித்து பிடித்தது போன்று அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டு மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியதும் எழுந்துள்ளார்.

அப்போது, அவரின் மனைவி மமதா சைக்கோ போன்று அப்படியே இருந்துள்ளார். அடுப்பில் பாதி வெந்தநிலையில் சடலமாகக் கிடந்த குழந்தையை மீட்ட தந்தை, உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், குழந்தையின் தாயார் மமதாவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கேங்… வேலை வாங்கித் தருவதாக மோசடி… ஆடம்பரமாக வாழ்ந்த கும்பலுக்கு ஆப்பு…

மதிய வேளையில் பசியெடுத்து அழுத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டியுள்ளார். இருந்தபோதும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கல் மனம் படைத்த பெண், குழந்தையின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். பசி ஒருபுறம் இருக்க, மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் பச்சிளம் குழந்தை உயிருக்குப் போராடியுள்ளது. தனது சக்திக்கு ஏற்ப பிஞ்சுக் கால்களால் எட்டி உதைத்து முடிந்த அளவிற்குப் போராடியுள்ளது. அதைக் கண்டும் மனம் இறங்காத கொடூரப் பெண், கை கால்களை இறுகக் கட்டியுள்ளார்.

பசியால் துடித்த இரண்டு மாத பச்சிளம் குழந்தையின் வாயைத் துணியால் அடைத்து, கை கால்களைக் கட்டி பெற்ற தாயே அடுப்பில் தூக்கி வீசி எரித்துக் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

Read More

Previous Post

ஈஸ்டர் தாக்குதல் : குண்டுதாரியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் : நீதிமன்றின் உத்தரவு

Next Post

கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் பாகிஸ்தான் நபர் பலி! | Makkal Osai

Next Post
கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் பாகிஸ்தான் நபர் பலி! | Makkal Osai

கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் பாகிஸ்தான் நபர் பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin