• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச் சந்தையில் களமிறங்கும் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ்.. அக்டோபர் 28-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச் சந்தையில் களமிறங்கும் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ்.. அக்டோபர் 28-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 3:24 PM IST

சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு ஐபிஓ-வின் இறுதி விலை மற்றும் பங்குகள் எண்ணிக்கை குறித்த முடிவுகள் அடுத்த வாரத்தில் எட்டப்படும்.

News18
News18

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்புப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms), பங்குச் சந்தை அறிமுகத்தை (IPO) அக்டோபர் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தையின் நிலவரங்களுக்கு உட்பட்டு, இந்த ஐபிஓ அக்டோபர் 21 அன்று சந்தா செலுத்துவதற்காகத் திறக்கப்பட்டு, அக்டோபர் 23 வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெரிய முதலீட்டாளர்களுக்கான ‘ஆங்கர் புக்’ அக்டோபர் 19 அன்றும், நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் 28 அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான வரைவு ஆவணங்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆகஸ்ட் 28 அன்று ஒப்புதல் அளித்து வழிவகை செய்துள்ளது.

இந்த ஐபிஓ முற்றிலும் புதிய பங்குகளின் விற்பனையை மட்டுமே கொண்டிருக்கும் என்பதால், இதிலிருந்து திரட்டப்படும் நிதி அனைத்தும் நேரடியாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் கடன் குறைப்பிற்கும் பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடனில் சுமார் ரூ. 27,500 கோடியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்துவதற்கும், மீதமுள்ள தொகை நிறுவனத்தின் பொதுவான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் பங்களிப்பை உறுதி செய்ய 50% பங்குகள் சில்லறை மற்றும் எச்என்ஐ முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கூட்டங்களில் இந்த ஐபிஓ-விற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு ஐபிஓ-வின் இறுதி விலை மற்றும் பங்குகள் எண்ணிக்கை குறித்த முடிவுகள் அடுத்த வாரத்தில் எட்டப்படும்.

மார்ச் 31 நிலவரப்படி 52.44 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும் ஜியோ, சீனாவுக்கு வெளியே 26.85 கோடி 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய 5ஜி சேவையாளராகவும் விளங்குகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி, “ஜியோ என்பது வெறும் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமல்ல; டிஜிட்டல் தயாரிப்புகள், நிறுவனத் தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் இந்தியாவிலேயே சொந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் ஒரு நிறுவனமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

“இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் இன்று! நாடு முழுவதும் நாளை போராட்டம்” – காங்கிரஸ்

Next Post

1,000 இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும் பள்ளி இடைவிலகலைக் குறைக்கவும் சாண்டியாகோ வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

1,000 இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும் பள்ளி இடைவிலகலைக் குறைக்கவும் சாண்டியாகோ வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin