சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 948.83 புள்ளிகள் கூடுதலுடன் 73,027.88-இல் தொடங்கி 71,879.44 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 74,534.82 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 2,303.19 புள்ளிகள் (3.20 சதவீதம்) கூடுதலுடன் 74,382.24-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,918 பங்குகளில் 2,599 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,221 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

