44
பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில், தெற்காசியாவில் அதன் அரசியல், பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை மேம்படுத்துவதற்கு சீனா போராடியது.டாக்காவை ஒரு சாத்தியமான தளமாக அது பயன்படுத்தியது. இருப்பினும், ஹசீனாவின் வெளியேற்றம் மற்றும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை நிறுவியதன் மூலம், பங்காளதேஷ் சீனாவின் அரசியலுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹசீனாவை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய மாணவர்களை டாக்காவிற்கான சீனத் தூதர் யாவ் வென் சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்து சிறிது நேரத்திலேயே, சீனக் கடற்படைக் கப்பல்கள் அக்டோபர் 12-15 வரை பங்களாதேஷில் நங்கூறமிட்டன. இந்த நகர்வானது பிராந்தியத்தில் மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்த பீஜிங்கின் நோக்கங்களை சமிக்ஞை செய்கிறது.
பங்காளதேச கடற்படையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் “பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தை” வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மூன்று நாள் பயணத்தை ஒரு நல்லெண்ணச் சைகை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சு விவரித்துள்ளது.
இதற்கு முன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஐ.நா தலைமையகத்தில் பங்களாதேஷ தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸை 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி சந்தித்தார். இருதரப்பு உறவுகள் மற்றும் சூரியசக்தி பேனல் முதலீடுகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக யூனுஸ் தெரிவித்திருந்தார். ஆனால் பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகாரங்களும் நிகழ்ச்சி நிரலில் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். .
வரலாற்று ரீதியாக, ஹசீனாவின் நிர்வாகத்தின் போது கூட, பங்களாதேஷ் சீன பாதுகாப்பு ஈடுபாட்டை எளிதாக்கியது. 2016 ஆம் ஆண்டில், சீனா பங்காளதேச கடற்படைக்கு இரண்டு புதுப்பிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியது. அத்தோடு மே 2024 இல், அந்த நாடுகள் தங்களின் முதல் இருதரப்பு இராணுவப் பயிற்சியை நடத்தியது. மேலும், காக்ஸ் பஜாரில் 1.21 பில்லியன் டொலர் செலவில் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்கப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஹசீனாவின் அரசாங்கம் முன்னர் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2020 இல், நேபாளத்திற்கான பயணத்திற்குப் பிறகு சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பங்களாதேஷ் நிராகரித்தது. 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட டாக்காவின் இந்தோ-பசிபிக் மூலோபாயம், ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் (UNCLOS) உடன்படிக்கையை கடைப்பிடிப்பதை வலியுறுத்தியது.
பங்களாதேஷின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் அதன் இருப்பிடத்தால் பெருக்கப்படுகிறது. 2021 இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மாரில் அதன் நடவடிக்கைகளைப் போலவே, தற்போது இடைக்கால அரசாங்கம் நடைமுறையில் இருப்பதால், சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைக் காண்கிறது.
பங்களாதேஷில் பல்வேறு திட்டங்களில் 25 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்த சீனா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் இரண்டாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. இந்த திட்டங்களில் பாலங்கள்,வீதிகள், ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை அடங்கும்.முதன்மையாக பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் கடன்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், பங்களாதேஷில் சீன முதலீடுகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன, சுமார் 700 சீன நிறுவனங்கள் அந்த நாட்டில் செயல்படுகின்றன.
வர்த்தக முன்னணியில், பங்களாதேஷின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)