சாங்கி விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி மதியம் 1.50 மணியளவில் முனையம் 3ன் ட்ரான்சிட் பகுதியில் உள்ள தி ஷில்லா காஸ்மெடிக்ஸ் & பெர்ஃப்யூம்ஸ் கடையில் நடந்த திருட்டு வழக்கு குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சாங்கி விமான நிலையத்தில் திருடிய இந்தியருக்குச் சிறை… இன்னொருவருக்கு அபராதம்
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் அங்கிருந்து மூன்று லிப்ஸ்டிக் மற்றும் ஒரு ஹேர் சீரம் செட்டை எடுத்ததாகக் கூறப்படுகிறது, அதன் மொத்த மதிப்பு S$294.70 ஆகும்.
டிஸ்பிலேவில் அடுக்கி இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் எதுவும் செலுத்தாமல் அவர் கடையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட தொடர் விசாரணைகள் மற்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில், விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
சிங்கப்பூரை விட்டு வெளியேற இருந்த அவர், ட்ரான்சிட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார், புகார் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் அவர் பிடிபட்டதால் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற முடியவில்லை.
சாங்கி விமான நிலையத்தில் செண்டு, மிட்டாய்களை திருடிய வெளிநாட்டவர் கைது
இரண்டாவது திருட்டு
தீர விசாரித்ததில், சாங்கி விமான நிலையத்தில் உள்ள மற்றொரு கடையில் இருந்தும் S$153 மதிப்புள்ள வாசனை திரவிய பாட்டிலை அவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
திருடப்பட்ட ஐந்து பொருட்களும் அவரிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டன.
இன்று ஜூலை 1 ஆம் தேதி அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சமீப நாட்களாக சாங்கி விமான நிலையத்தில் திருடி பிடிபடுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோழி, ஆடு, மாட்டிறைச்சிகளை கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியர் – சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்
சாங்கி ஏர்போர்ட்டில் பலே திட்டம் போட்ட இரு வெளிநாட்டு ஊழியர்கள்; தமிழ் வம்சாவளி ஊழியருக்கு சிறை!