மலேசியாவில் தனது பங்களாதேஷ் காதலன் பிறப்புறுப்பை கட் செய்ததாக 34 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுமிக்க அந்த ஆடவர், பங்களாதேஷில் தனக்கு சட்டப்பூர்வமாக திருமணமாகி மனைவி இருப்பதை மறைத்து மலேசிய பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார்.
துவாஸில் மெத்தை, தலையணையில் புகையிலை.. வெளிநாட்டு ஓட்டுநர் கைது
இந்த உண்மையை கண்டறிந்த பெண் ஆடவரின் பிறப்புறுப்பை க த்தியை வைத்து வெ ட்டி எடுத்ததாக அந்நாட்டு காவல்துறை மலேசிய ஊடகங்களுக்குத் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள கெலாங் படாவில் கடந்த அக். 8 அன்று இந்த சம்பவம் நடந்ததாகவும், 33 வயது பங்களதேஷ் ஆடவரின் பிறப்புறுப்பு மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறைக்கு புகார் வந்தது.
இதனை அடுத்து அதே நாள் மதியம் 12:15 மணிக்கு குற்றம் சாட்டப்பட்ட 34 வயதுமிக்க பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
பங்களாதேஷில் இருக்கும் தனது மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, மலேசிய பெண்ணுடன் அவர் உறவில் இருந்ததால் இந்த தாக்குதல் அரங்கேறியதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட பெண் அக்டோபர் 13 வரை ஐந்து நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறை.. ஜன்னல் வழியே பெண்ணை கண்டு, படுக்கையறைக்குள் நுழைந்த ஊழியர்