பக்ரீத் பண்டிகை வருகின்ற திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. அதிகாலை 5 மணி முதல் ஆடு விற்பனை நடைபெற்றது.
தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.
இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு 10ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆட்டு குட்டி 500 முதல் விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர். இதனால் வாரச்சந்தையில் வெள்ளாடுகளைக் காட்டிலும், செம்மறி ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
இதையும் படிங்க: ஒரு கோடிப்பே…. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டையில் பரபரப்பாக ஆடு விற்பனை…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு விலை அதிகரித்ததால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
