Last Updated:
கிங்ஸ்லி அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடச் சென்றதால் பெற்ற மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் கொலை வெறி தாக்குதல் நடத்திய தந்தை போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிங்ஸ்லி – சஜினி தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கிங்ஸ்லி அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார். வியாழக்கிழமை தனது மனைவியுடன் அவர் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மகன், அக்கம் பக்கத்துச் சிறுவர்களுடன் விளையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கிங்ஸ்லியின் மகன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் கடும் ஆத்திரம் அடைந்தார். கனத்த குரலில் சத்தம் போட்டவர் மகனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஸ்கிப்பிங் கயிற்றால் உடல் முழுவதும் கடுமையாக தாக்கி உள்ளார். இதில் சிறுவனின் உடலில் ரத்தக் காயங்களுடன் கொப்பளங்கள் ஏற்பட்டு கடும் வேதனைக்கு ஆளானார்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே சிறுவன் பக்கத்து வீட்டிற்கு ஓடி உள்ளார். இதனிடையே, சிறுவனின் உடலில் காயம் ஏற்பட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் களத்தில் இறங்கினர். வீட்டிலிருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுவனின் தந்தை கிங்ஸிலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடச் சென்றதால் பெற்ற மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் தந்தை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?


