இந்தியாவில் கோடைக்கால விடுமுறைகளை மையமாக வைத்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் லீக் போட்டியாகவுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி மவுசு இருந்தாலும், சென்னை, பெங்களூரு, மும்பை அணிகளின் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆன்லைன் காத்திருந்து டிக்கெட் கிடைக்காத விரக்தியில் கள்ளச்சந்தைகளிலும் டிக்கெட்டுகளை வாங்குகின்றன.
நேரில் டிக்கெட் விற்பனை என்று கூறினாலும், அங்கும் ஐபிஎல் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது ஐபிஎல் டிக்கெட்டுக்கான வரிவிகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதிய வரிவிகிதத்தின் அடிப்படையில் ஐபிஎல் டிக்கெட்டின் விலை ரூ.500 டிக்கெட் ரூ.640 லிருந்து ரூ. 700 ஆகவும், ரூ.1,000 டிக்கெட் ரூ.1,280 லிருந்து ரூ.1,400 ஆகவும், ரூ.2,000 டிக்கெட் ரூ.2,560 லிருந்து ரூ. 2,800 ஆகவும் உயர்ந்துள்ளது.
இருப்பினும், ஐபிஎல்லை போன்றே இந்திய சூப்பர் லீக், புரோ கபடி லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இந்த வரிவிகிதத்தில் வருமா? என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

