தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார்.
அடம் பிடிக்கும் ட்ரம்ப்
சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன்.
என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது” என்று பேசியிருந்தார்.
நோபல் பரிசை பகிர நினைக்கும் மச்சாடோ
இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

