Last Updated:
ஜார்க்கண்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்த சோகம்…
ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி நேற்று இரவு 7.10 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. தேடுதல் பணிகளுக்குப் பிறகு சத்ரா மாவட்டத்தின் கர்மதந்த் கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
#WATCH | An air ambulance, with seven people (including 2 crew members) on board, crashed in Kasariya Panchayat, Simariya block of Chatra district, in Jharkhand.
It was a Redbird Airways Pvt Ltd Beechcraft C90 aircraft VT-AJV operating a medical evacuation (air ambulance)… pic.twitter.com/xmr9OOcdNh— ANI (@ANI) February 24, 2026
விமானத்தில் ஒரு நோயாளி, மருத்துவர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் ஏழு பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்ட நிலையில், உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


