• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நைஜீரியா படகு விபத்தில்: 60 பேர் உயிரிழப்பு; 80 பேரை காணவில்லை – 160 பேர் உயிருடன் மீட்பு | At least 60 dead in Nigeria boat accident

GenevaTimes by GenevaTimes
October 4, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
நைஜீரியா படகு விபத்தில்: 60 பேர் உயிரிழப்பு; 80 பேரை காணவில்லை – 160 பேர் உயிருடன் மீட்பு | At least 60 dead in Nigeria boat accident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 60 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டும் உயிர் தப்பினர். இந்நிலையில் எஞ்சிய 80 பயணிகளை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்பு 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்கின்றன. படகுகளை முறையாக பராமரிக்காதது, அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுவதுஆகியவை பெரும்பாலும் படகு விபத்துகளுக்கு காரணங்களாக உள்ளன. இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான படகில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், 100 பேர் மட்டுமே அப்படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



Read More

Previous Post

லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பலமுனை தாக்குதல் | Israel launched a multi-pronged attack by bombing Lebanon, Gaza, Yemen Syria

Next Post

Expensive Parking : பார்க்கிங் செய்யும் இடம் ரூ.4 கோடி… விலை கொடுத்தாலும் இடம் கிடைக்காது.. எங்கே தெரியுமா?

Next Post
Expensive Parking : பார்க்கிங் செய்யும் இடம் ரூ.4 கோடி… விலை கொடுத்தாலும் இடம் கிடைக்காது.. எங்கே தெரியுமா?

Expensive Parking : பார்க்கிங் செய்யும் இடம் ரூ.4 கோடி... விலை கொடுத்தாலும் இடம் கிடைக்காது.. எங்கே தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin