• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நேஹல் வதேரா, சஷாங்க், ஹர்பிரீத் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி | RR vs PBKS, IPL 2025

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நேஹல் வதேரா, சஷாங்க், ஹர்பிரீத் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி | RR vs PBKS, IPL 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. பஞ்​சாபின் நேஹல் வதே​ரா, சஷாங்க் சிங், ஹர்​பிரீத் பிரார் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

இந்த ஆட்​டம் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 219 ரன்​கள் குவித்​தது.

பிரியன்ஷ் ஆர்யா 9, மிட்​செல் ஓவன் 0, பிரப்​சிம்​ரன் 21 ரன்​கள் எடுத்து ஆட்​டம் இழந்​தனர். இதனால் அந்த அணி 3 விக்​கெட் இழப்​புக்கு 34 ரன்​கள் எடுத்து தள்​ளாடியது. ஆனால், அதன் பின்​னர் களத்​துக்கு வந்த நேஹல் வதே​ரா, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி எதிரணி​யின் பந்​து​வீச்சை விளாசித் தள்​ளியது.

ஸ்ரேயஸ் ஐயர் 25 பந்​துகளில் 30 ரன்​கள்(5 பவுண்​டரி​கள்) எடுத்து ஆட்​ட​மிழந்​தார். நேஹல் வதேரா அதிரடி​யாக விளை​யாடி 37 பந்​துகளில் 70 ரன்​கள் குவித்​தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​கள் அடங்​கும்.

6-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த சஷாங்க் சிங்​கும், அஸ்​மத்​துல்லா ஓமர்​ஸா​யும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தனர். 20 ஓவர்​கள் முடி​வில் சஷாங்க் சிங் 30 பந்​துகளில் 59 ரன்​களும், அஸ்​மத்​துல்லா 9 பந்​துகளில் 21 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

பின்​னர் 220 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 209 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. இதையடுத்து 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் வெற்றி பெற்​றது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 50, வைபவ் சூர்​ய​வன்ஷி 40, சஞ்சு சாம்​சன் 20, ரியான் பராக் 13, துருவ் ஜூரெல் 53,ஷிம்​ரன் ஹெட்​மயர் 11 ரன்​கள் எடுத்​தனர்.

ராஜஸ்​தான் வீரர்​கள் அதிரடி​யாக ரன் குவித்து வெற்​றியை நெருங்கி வந்​தனர். ஆனால், கடைசி ஓவரில் 22 ரன்​கள் எடுக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் அந்த அணி இருந்​தது. அப்​போது களத்​தில் துருவ் ஜூரெலும், ஷுபம் துபே​வும் இருந்​தனர். கடைசி ஓவரை மார்கோ யான்​சன் வீசி​னார்.

இந்த ஓவரின் 3-வது பந்​தில் துருவ் ஜூரெலை​யும், 4-வது பந்​தில் ஹசரங்​காவை யும் யான்​சன் வீழ்த்​தி​னார். கடைசி 2 பந்​துகளில் கெவானா மாபாகா 2 பவுண்​டரி​களை விளாசி​னார். இருந்​த​போதும் வெற்​றிக்​குத் தேவை​யான ரன்​களை ராஜஸ்​தான் அணி​யால்எடுக்க முடிய​வில்​லை. பஞ்​சாப் தரப்​பில் ஹர்​பிரீத் பிரார் 3, மார்கோ யான்​சன், அஸ்​மத்​துல்லா ஓமர்​ஸாய் ஆகியோர் தலா2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்.

3 விக்​கெட்​களை வீழ்த்​திய ஹர்​பிரீத் பிரார் ஆட்​ட​நாயக​னாக தேர்வு செய்​யப்​பட்​டார். பஞ்​சாப் அணி 12 போட்​டிகளில் விளை​யாடி 8 வெற்​றி, 3 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என மொத்​தம் 17 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் முன்​னேறி​யுள்​ளது. ராஜஸ்​தான் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 10 தோல்வி​கள்​ என 6 புள்​ளி​களு​டன்​ பட்​டியலில்​ 9-வது இடத்​தில்​ உள்​ளது.



Read More

Previous Post

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

Next Post

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனை | IMF sets 11 conditions for providing funds to Pakistan

Next Post
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனை | IMF sets 11 conditions for providing funds to Pakistan

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனை | IMF sets 11 conditions for providing funds to Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin