Last Updated:
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரமணிய சுவாமியின் புகாரின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் குற்றம்சாட்டினால் தான் அதனை ஏற்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
December 16, 2025 3:03 PM IST


