• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் | National Herald PMLA case: Delhi court issues notice to Sonia Gandhi, Rahul Gandhi

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் | National Herald PMLA case: Delhi court issues notice to Sonia Gandhi, Rahul Gandhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1937-ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல.

ஏஜெஎல் நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் ஆகிய நாளிதழ்கள் 2008 வரை வெளிவந்தன. அதன்பின் இந்நிறுவனம் இழப்பை சந்தித்து முடங்கியது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா, பஞ்ச்குலாம் ஆகிய இடங்களில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்நிறுவனம் நாளிதழ்களை மீண்டும் இயக்க காங்கிரஸ் கட்சியிடமிருந்து ரூ.90.25 கோடி வட்டியில்லா கடன் பெற்றது. ஆனால், இந்த கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தியை இயக்குனராக கொண்டு ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனம் ரூ.5 லட்சம் முதலீட்டில் கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. இதன் இயக்குநர்களில் ஒருவராக சோனியா காந்தியும் இணைந்தார். இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் உள்ளது. மீதி 24% பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரிடம் உள்ளது.

ஏஜெஎல் நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்ற ரூ.90 கோடி கடன், அதன் பங்குகளை யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்ற 2011-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏஜெஎல் நிறுவனம் தனது நாளிதழ்களை மீண்டும் வெளியிட கடந்த 2016-ல் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏஜெஎல் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்படுவது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என அதன் பங்குதாரர்கள் குற்றம்சாட்டினர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், அலகாபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆகியோரும் ஏஜெஎல் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5,000 கோடி மதிப்புடைய சொத்துகள் மற்றும் பங்குகளை கொண்டுள்ள ஏஜெஎல் என்ற பொது நிறுவனத்தை, ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது எனவும், இதில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேடு செய்துள்ளனர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் 2013-ல் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதில் நிதி மோசடி நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத் துறை 2014-ல் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரும் சோனியா, ராகுல் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் 2015-ல் தள்ளுபடி செய்தது. அதன்பின் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை 2023 ஆண்டு நவம்பரில் முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஏஜெஎல் நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என அமலாக்கத் துறை கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்தும் உரிமை உள்ளது. மேலும், இது நியாயமான விசாரணைக்கு உயிர் கொடுக்கிறது என்று தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



Read More

Previous Post

ரபிஸி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை – பிரதமர் – Malaysiakini

Next Post

இந்தியாவின் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் காரை வாங்கிய சூரத் வைர வியாபாரி… யார் தெரியுமா…?

Next Post
இந்தியாவின் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் காரை வாங்கிய சூரத் வைர வியாபாரி… யார் தெரியுமா…?

இந்தியாவின் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் காரை வாங்கிய சூரத் வைர வியாபாரி... யார் தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin