Last Updated:
கடந்த ஆகஸ்ட் இறுதியில் பனிப்பாறை உடைந்ததில் ஏற்பட்ட பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், அங்கு தற்போது மீண்டும் கனமழை மிரட்டி வருகிறது.
நேபாளத்தில் கனமழை காரணமாக மீண்டும் பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களுக்கு பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#WATCH | பெரு வெள்ளத்தை நினைவூட்டும் வகையில் மீண்டும் நேபாளத்தில் இயற்கை பேரிடர்…காளி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்புகள் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்#Nepal #Flood #Landslide #News18TamilNadu pic.twitter.com/cbObC8cwmT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2026
சிட்வான் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகளின் கூரைகளில் ஏறி நின்று பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றப் போராடும் காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளன. மியாக்டி, பாக்லுங் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் இறுதியில் பனிப்பாறை உடைந்ததில் ஏற்பட்ட பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், அங்கு தற்போது மீண்டும் கனமழை மிரட்டி வருகிறது.

