• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு | Insecticides, fungicides introduced to increase rice yield

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு | Insecticides, fungicides introduced to increase rice yield
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைத​ரா​பாத்: உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும். உரங்​கள் நெல்​லுக்கு தேவையான ஊட்​டச்சத்​துக்​களை வழங்​கு​கின்​றன. உறை கரு​கல் நோயை ஆரம்​பத்​திலேயே கண்டு பிடித்து தடுக்​கா​விட்​டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்​கப்​படும் என்​கிறது விவ​சா​யத் துறை. இதற்கு தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், பிஏஎஸ்​எப் நிறு​வனம் தனது மும்​பை, புனே ஆய்​வகங்​களில் தொடர்ச்​சி​யாக நடத்​திய ஆய்​வில் புதிய ரசாயன திர​வங்​களை கண்​டு​பிடித்​துள்​ளது.

இதுகுறித்​து, பிஏஎஸ்​எப் தெற்​காசிய நிர்​வாக இயக்​குநர்​கள் குழு​வின் உறுப்​பினர் மைக் ஹெய்ன்​ஸ், மூத்த துணைத் தலை​வர்​கள் மார்கோ க்ரோஸ்​டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்​எப் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அலெக்​சாண்​டர் கெர்​டிங், பிஏஎஸ்​எப் இந்​தி​யா​வுக்​கான வேளாண் தீர்​வு​கள் பிரி​வின் வணிக இயக்​குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற புதிய ரசாயன திர​வங்​களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளி​யிட்ட​னர். பின்னர் அவர்கள் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 130 ஆண்​டு​களுக்​கும் மேலாக விவ​சா​யத்​துறை​யுடன் இணைந்து செயல்​படும் எங்​களது பிஏஎஸ்​எப் என்ற பிரபல ரசாயன உற்​பத்தி நிறு​வனம், ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற இரண்டு நவீன ரசாயன திர​வங்​களை வெளி​யிட்​டுள்​ளது.

இந்​தி​யா​விலேயே கண்​டு​பிடிக்​கப்​பட்ட ‘வேலெக்​சி​யோ’ என்ற பூச்​சிக்​கொல்லி திரவம், தாவரங்​களின் முழு வளர்ச்​சி​யை​யும், அறு​வடை காலம்​வரை பூச்​சிகளிட​மிருந்து முழு பாது​காப்​பை​யும் வழங்​கும் பிரெக்​ஸியோ ஆற்​றல் கொண்​ட​தாக இருக்​கும். அதே​போல ‘மிபிலி​யா’ என்ற பூஞ்​சாணக்​கொல்​லி, ரெவி​சால் ரசாயனத்​தில் முதன்​மை​யானது. இந்​திய சுற்​றுச்​சூழலுக்கு ஏற்ப நெல் பயிர்​களுக்கு முழு​மை​யான வளர்ச்​சி​யும், பூஞ்​சாண நோயி​லிருந்து பாது​காப்​பும் வழங்​கு​கிறது.

இதுதொடர்​பாக நாங்​கள் நடத்​திய ஆய்​வு​களில், வேலெக்​சியோ மூலம் நெல் பயிர்​களுக்கு மிகச் சிறப்​பான வளர்ச்சி கிடைப்​பது உறுதி ஆனது. லெக்​சியோ தெளிக்​கப்​பட்ட நெல் வயல்​களில் பயிர்​கள் வலு​வான தண்​டு, சிறப்​பான இழை தன்மை வளர்ச்​சி, அடர்த்​தி​யான வேர்​கள் மற்​றும் அகல​மான கொடி (கண்​ணாடி இலை) இலைகளு​டன் வளர்​வ​தால், நெல் விவ​சா​யிகளுக்கு அதிக மகசூல் கிடைக்​கும் என உறு​தி​யளிக்​கிறோம். மேலும், இந்த பூஞ்​சாணக்​கொல்​லி, நெல்​லில் இலை​யுறைக்கரு​கல் நோய் மற்​றும் டர்ட்டி பானிகல் நோய்​களை விரை​வாகக்கட்​டுப்​படுத்​தி, நீண்ட காலத்​திற்​குப் பாது​காப்பு வழங்​கும். இந்த இரு ரசாயன திர​வங்​களும் இந்​தி​யா​வில் நெல் பயிர்​களை பூச்​சிகளின் தாக்​குதலில் இருந்​தும், சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களில் இருந்​தும் பாது​காத்து நெல் உற்​பத்​தியை அதி​கரிக்​கச் செய்​யும் என்​ப​தில் ஐயமில்​லை.

‘மேட் இன் இந்​தி​யா’ திட்​டத்​தில் புனே மற்​றும் மும்​பை​யில் உள்ள ஆய்​வகத்​தில் தயாரிக்​கப்​பட்ட வேலெக்​சி​யோ, உலக சந்​தை​யிலும் கால் பதிக்​கிறது. நெல் பயி​ரில் நோய் தாக்​குதலை தடுக்​கா​விட்​டால், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்​படலாம். அதனால், விவ​சா​யிகளின் தேவைக்கு ஏற்ப இந்த பரு​வத்​தில், நெல் நடவு தொடங்​கும் போது, வேலெக்​சியோ பூச்​சிக்​கொல்லி மற்​றும் மிபிலியா பூஞ்​சாணக்​கொல்லி ஆகியவை ஜூன் மாதத்​திலிருந்து சந்​தை​யில் கிடைக்​கும், என்​றனர்.

விலை விவரம்: ‘வேலெக்​சி​யோ’ 60 மிலி கொண்ட ரசாயன திர​வத்​தின் விலை ரூ.1,755. இது ஒரு ஏக்​கருக்கு போது​மான​தாக இருக்​கும். 120 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,360. அதே​போல, 300 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ. 7,920. ஒரு ஏக்​கர் நெல் பயிருக்கு தேவை​யான மிபிலியா திர​வத்​தின் 120 மிலி விலை ரூ.1,092. அதே​நேரத்​தில் 360 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,096.உலகில் நெல் உற்​பத்தி செய்​யும் நாடு​களில் இந்​தியா மிகப்​பெரிய பங்கு வகிக்​கிறது. குறிப்​பாக, ஒவ்​வொரு ஆண்​டும் 100 மில்​லியன் மெட்​ரிக் டன்​களுக்கு மேல், அதாவது உலக நெல் வர்த்​தகத்​தில் 40 சதவீத பங்​களிப்​புடன் முக்​கிய இடத்தை பெற்​றுள்​ளது.

சீனா​வில் ஒரு ஹெக்​டேரில் 7 டன் நெல் அறு​வடை செய்​யப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இது 4.2 டன்​னாக மட்​டுமே உள்​ளது. இதனால், இந்​திய நெல் விவ​சா​யிகளுக்​கு, நோய் தடுப்பு திரவங்கள் அவசி​யம் தேவை என்​பதை உணர்ந்​த​தால், பல்​வேறு ஆராய்ச்​சிகளின் அடிப்​படை​யில் இந்த இரண்டு ரசாயன திர​வங்​களும் தயாரிக்​கப்​பட்​டுள்ளன என்​கிறது பிஏஎஸ்​எப்.

தமிழகத்​தில் உற்​பத்தி குறைந்​தது: தமிழகத்​தில் காவிரி டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 18 லட்​சம் ஏக்​கரிலும், காவிரி டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் சுமார் 34 லட்​சம் ஏக்​கரிலும் நெல் பயி​ரிடப்​படு​கிறது.2023-24 காலாண்​டில், தமிழ்​நாட்​டின் நெல் விளைச்​சல், தேசிய சராசரியை விட (2.74 டன்​/ஹெக்​டேர்) குறை​வாக, 2.31 டன்​/ஹெக்​டேர் ஆக பதி​வாகி​யுள்​ளது.இதற்கு பல்​வேறு காரணி​களை விவ​சா​யத் துறை தெரி​வித்​துள்​ளது. 2024 – ம் ஆண்​டில், காவிரி டெல்டா பகு​தி​யில் நீர் பற்​றாக்​குறை காரண​மாக சாம்பா பயிரின் விளைச்​சல் 40% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

– ஹைத​ரா​பாத்​தில் இருந்து எஸ்.அருள்மொழிச் செல்​வன்



Read More

Previous Post

Tamilmirror Online || துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல்

Next Post

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

Next Post
ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin