
நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்வனவுக்கான புதிய குறைந்தபட்ச விலைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லின் விலை 140 ரூபாயாகவும், சம்பா நெல்லின் விலை 130 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நியாயமான வர்த்தகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

