• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் பாதியாக குறைந்தது மகசூல்: டெல்டா விவசாயிகள் கவலை | Delta farmers are worried as their rice crops have been submerged in rainwater

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் பாதியாக குறைந்தது மகசூல்: டெல்டா விவசாயிகள் கவலை | Delta farmers are worried as their rice crops have been submerged in rainwater
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாகப்பட்டினம்: நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற் கொள்ளப்பட்டது.

நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், வடகிழக்கு பருவமழை பெய்து பல இடங்களில் வயலில் தேங்கிய மழைநீரில் சாய்ந்து மூழ்கியதால் பெருமளவில் நெல்மணிகள் முளைவிட்டும், பயிர்கள் அழுகியும் பாதிக்கப்பட்டது.

மழைக்கு முன்னதாக 80 சதவீதம் அறுவடைப் பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில் எஞ்சிய பரப்பளவு நெற்பயிர்கள் அறுவடை பணிகள் மழை காரணமாக 10 நாட்களுக்கு மேலாக முடங்கியது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததாலும், புயல்- மழை முன்னெச்சரிக்கை காரணமாகவும் குறுவை அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுந்தரபாண்டியம், நெய்விளக்கு, வடபாதி, கீரங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் இரவு- பகலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே புகையான் நோய் தாக்கி நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மழையால் முளைத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மகசூல் பெரிய அளவில் குறைந்துள்ளதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்த நிலையில் தற்போது 10- 15 மூட்டைகள் வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகசூல் பாதியாக குறைந்துள்ளதால் ஏக்கருக்கு ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்படும் என்று கவலை தெரிவித்த விவசாயிகள், நெல் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து விரைந்து கணக் கெடுத்து உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.



Read More

Previous Post

IND vs PAK : ‘பவுலர்கள் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்’ – பாகிஸ்தான் கேப்டன் வலியுறுத்தல் | விளையாட்டு

Next Post

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India – Pak war

Next Post
மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India – Pak war

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்... - ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India - Pak war

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin