பொதுவாக தேர்தல் சமயத்தில் சில அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநில காவல்துறை டிஜிபி ராஷ்மி சுக்லாவை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஷ்மி சுக்லாவுக்கு அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம், மகாராஷ்டிர தலைமை செயலருக்கு அறிவுறுத்தியது. புதிய டிஜிபியாக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று 3 பேர் குழுவை செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மாநில தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து ராஷ்மி சுக்லா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் கொல்லப்பட்ட நிலையில், ராஷ்மி மீது புகார்கள் குவிந்தன. 288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரத்துக்கு ஒரே கட்டமாக வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)