தற்போதைய நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண தேசிய ஒலிம்பிக் குழு உடனடியாக தலையிடும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (20) தெரிவித்தார்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து கேட்டறிவதற்காக விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு உறுப்பினர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில், இன்று (20) நடைபெற்றது.
இதன்போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.AN

