• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்… அசாமில் நிகழ்ந்த வரலாற்று சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்… அசாமில் நிகழ்ந்த வரலாற்று சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 14, 2026 11:43 AM IST

அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், தேசிய நெடுஞ்சாலை-37 இல் அமைந்துள்ள மோரான் பைபாஸ் பகுதியில் உள்ள அவசர கால தளத்தில் தரையிறங்கினார்.

News18
News18

சீன எல்லை அருகே அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் இந்திய அரசு அவசர கால தரையிறங்கும் தளம் (Emergency Landing Facility – ELF) அமைத்துள்ளது. இந்தத் தளம் அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37ல், மோரான் பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அவசர கால தரையிறங்கும் தளம் இது.

4.2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நெடுஞ்சாலைப் பகுதி வலுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இந்தத் தளம் சாதாரண சாலைகளைப் போலன்றி, கனரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 40 டன் எடை வரையிலான போர் விமானங்களையும், 74 டன் வரையிலான அதிகபட்ச எடை கொண்ட சரக்கு விமானங்களையும் தாங்கும் வலிமை கொண்டது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இணைந்து இதனைச் சர்வதேசத் தரத்தில் உருவாக்கியுள்ளன.

போர் காலங்களில் அல்லது எல்லையில் நெருக்கடி ஏற்படும் போது, வழக்கமான விமான நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால், இந்த நெடுஞ்சாலைத் தளங்கள் போர் விமானங்கள் தடையின்றி இயங்க உதவும். வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது, நிவாரணப் பொருட்களை விரைவாகக் கொண்டு செல்லவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இது ஒரு தற்காலிக ஓடுதளமாகச் செயல்படும்.

அவசரத் தேவைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் அல்லது கனரக இயந்திரங்களை விரைவாக இடமாற்றம் செய்ய இது வசதியாக இருக்கும். எனினும், சாதாரண நேரங்களில் இது பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு விமானம் தரையிறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களான ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் இதுபோன்ற தளங்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று அசாமின் இந்த அவசர கால தரையிறங்கும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சி-130ஜே போர் விமானம் மூலம் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தார். அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், தேசிய நெடுஞ்சாலை-37 இல் அமைந்துள்ள மோரான் பைபாஸ் பகுதியில் உள்ள அவசர கால தளத்தில் தரையிறங்கினார். இந்த வரலாற்று நிகழ்விற்குப் பிறகு, குவஹாத்தியில் உள்ள லச்சித் காட் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் இது பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

Feb 14, 2026 11:43 AM IST

Read More

Previous Post

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்… மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

Next Post

காதலர் தினம்: ட்ரம்பிற்கு வெள்ளை மாளிகையின் வித்தியாச வாழ்த்து|Trump Gets a Valentine’s Day Tribute From the White House

Next Post
காதலர் தினம்: ட்ரம்பிற்கு வெள்ளை மாளிகையின் வித்தியாச வாழ்த்து|Trump Gets a Valentine’s Day Tribute From the White House

காதலர் தினம்: ட்ரம்பிற்கு வெள்ளை மாளிகையின் வித்தியாச வாழ்த்து|Trump Gets a Valentine’s Day Tribute From the White House

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin