• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நெகிரி செம்பிலான் 2026 தேர்தல்: மக்கள் நீதி கட்சியின் (PKR) 16 தளபதிகள் களம் இறக்கம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
நெகிரி செம்பிலான் 2026 தேர்தல்: மக்கள் நீதி கட்சியின் (PKR) 16 தளபதிகள் களம் இறக்கம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராமேஸ்வரி ராஜா

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலத்தின் 36 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.மொத்தம் 889,490 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண் வாக்காளர்கள் 50.23 விழுக்காடாகவும், ஆண் வாக்காளர்கள் 49.77 விழுக்காடாகவும் உள்ளனர். மேலும், இந்த வாக்காளர் பட்டியலில் 21 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிக எண்ணிக்கையைக் கொண்ட மிகப்பெரிய பிரிவினராக இடம்பெற்றுள்ளனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.இத்தேர்தலில் மொத்தம் 103 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முதன்மை அங்கத்துவக் கட்சியான மக்கள் நீதி கட்சி (PKR – Parti Keadilan Rakyat) இத்தேர்தலில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் பேசிய மக்கள் நீதி கட்சியின் (பி.கே.ஆர்) தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு பெருக்கம், அனைத்து இன மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் தடையின்றித் தொடர பாக்காத்தான் ஹராப்பான் அரசின் பங்களிப்பு மிகவும் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள், திறமைமிக்க இளைஞர்களின் கூட்டுப் பங்களிப்போடு 16 தொகுதிகளிலும் பி.கே.ஆர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை நம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.

பி.கே.ஆர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளைப் பொறுத்தவரை, N02 (PERTANG) பெர்தாங் தொகுதியில் பி.கே.ஆர் சார்பில் முஹம்மட் உம்ரி அப்துல் கோயிஸ் களமிறங்குகிறார். N03 (SUNGAI LUI) சுங்கை லூய் தொகுதியில் ஜைனல் ஃபிக்ரி அப்துல் காடிர், N06 (PALONG) பாலோங்கில் முஹம்மட் ஸாஹின் ஸினால் அபிடின் போட்டியிடும் நிலையில், நான்கு முனைப் போட்டி நிலவும் N07 (JERAM PADANG) ஜெராம் பாடாங் தொகுதியில் ஜி. மணிவண்ணன் களமிறங்கியுள்ளார்.

தொடர்ந்து, N13 (SIKAMAT) சிகாமட்டில் நூர் அஸ்மான் முஹம்மாட், N14 (AMPANGAN) அம்பாங்கானில், டத்தோ முஹம்மாட் நஸ்ரி காசிம், N15 (JUASSEH) ஜுவாசேயில் முஹம்மாட் ஐடில் அப்துல்லா, N16 (SERI MENANTI) செரி மெனாந்தியில் முஹம்மாட் கமாருல் அரிஃபின் போட்டியிடுகின்றனர்.

நேரடிப் போட்டி நிலவும் N18 (PILAH) பிளா தொகுதியில் டத்தோ நூர்ஸுனிதா பேகம், N20 (LABU) லாபுவில் டத்தோ அஹ்மாட் ஃபாயிஸ்ஸ் அப்துல் ரசாக், N26 (CHEMBONG) செம்போங்கில் டேனிஷ் நஸ்ரன் முராட், N27 (RANTAU) ரந்தாவ் தொகுதியில் டாக்டர் அஸிஸுல் ஹக்கீம் மஹடி களமிறக்கப்பட்டுள்ளனர்.கடலோர தெற்குப் பகுதித் தொகுதிகளைப் பொறுத்தவரை, N29 (CHUAH) சுவா தொகுதியில் டத்தோ இயூ பூன் லாய், N32 (LINGGI) லிங்கி தொகுதியில் நடப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினூடின் ஹாருன், ஐந்து முனைப் போட்டி நிலவும் N33 (SRI TANJUNG) ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் டத்தோ டாக்டர் ஜி. ராஜசேகரன், N34 (GEMAS) கெமாஸ் தொகுதியில் சித்தி ஆயிஷா செமான் ஒத்மான் ஆகிய 16 பேரை கட்சி வெற்றி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டியுள்ளவாறு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல், இந்தியச் சமுதாயத்தின் கல்வி, தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பி40, எம்40 குடும்பங்களுக்கான சமூகச் நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாகக் கொண்டுள்ளது. வரும் ஜூலை 28-ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பிலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொது வாக்களிப்பிலும் வாக்காளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பாக்காத்தான் ஹராப்பான் – பி.கே.ஆர் கட்சியின் நன்மதிப்புமிக்க வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது..

இதனிடையே N33 (SRI TANJUNG) ஸ்ரீ தஞ்சோங்கில் இரண்டாவது முறையாக போட்டியிடும் டத்தோ டாக்டர் ஜி. ராஜசேகரன், தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக இங்குள்ள மக்களிடையே நிலவிவந்த ஏழ்மை நிலையை துடைத்தொழித்ததாக குறிபிட்டார். “போர்ட்டிக்சன் வட்டாரத்தில் மின்சுடலை அமைத்தது, ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்றியது, இனம் மதம் பாராமல் இங்குள்ள அனைத்து மக்களுக்குமான சேவையை திறம்பட செய்தது போன்றவை எனது வெற்றியை உறுதி செய்யும்” என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

சுவா சட்டமன்றத்தில் மீண்டும் தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு போட்டியிடும் டத்தோ இயூ பூன் லாய், “நான் இந்த தொகுதியில் வெற்றிப்பெற்ற பிறகு தொகுதியில் ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளை தீர்வு கண்டு வந்துள்ளேன். அதே சமயத்தில் தொகுதியில் அனைவரும் என் குடும்பமாகதான் பழகி வருகிறேன். எந்த இனத்தையும் நான் பிரித்து பார்த்தது கிடையாது. அதே சமயத்தில் ஆலயங்கள், பள்ளிவாசல்கள், சீன ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், சீன, மலாய் ஆரம்ப்ப்பள்ளிகளுக்கு சரிசமமாக நிதிகளை வழங்கி வருகிறேன் என்று தனது சேவை குறித்து பேசுகையில் குறிப்பிட்டார்.

பி. சந்திரா

ஜெராம் பாடாங் வேட்பாளர் மணிவண்ணன் கோவின் தொடர்ந்து தொகுதி மக்களுக்கான திட்டங்களை கட்டம் கட்டமாக அறிவித்து வருகிறார். தனது தாயாரின் சொந்த ஊரான ஜெராம் படாங் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் பாடுபடபோவதாக அவர் உறுதியளித்துள்ளார். புதிய முதலீடுகள் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சிறுகுறு தொழில்களை வலுப்படுத்துதல், கல்வி, TVET, விவசாயப் பயிற்சிகள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துதல், சாலை, மின்சாரம், இணையம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் சீரமைத்தல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாக முன்வைத்துள்ளார். மேலும், “அனைவருக்கும் நலன்புரி” கொள்கையின் கீழ் சிறப்பு உதவிகளை அறிவித்துள்ள அவர், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியைத் தொகுதியில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான டி.ஏ.பி சார்ந்து N36 ரெப்பா தொகுதியில் போட்டியிடும் வீரப்பன் சுப்பிரமணியம், 2008 முதல் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், 2004 முதல் டிஏபி கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தோடும் மக்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். தற்போது தொழில்முனைவோர், மனிதவளம், காலநிலை மாற்றத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக உள்ள தமக்கு வாக்காளர்கள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முழு ஆதரவு அளிபார்கள் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆஷா ராணி

இதனிடையே நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் தாங்கள் அடைந்த பயன்களை அங்குள்ள வாக்காளர்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். பி. சந்திரா என்பவர் கூறுகையில், கடந்த 62 ஆண்டுகால ஆட்சியில் தீர்க்கப்படாமல் இருந்த கோயில் நிலப் பிரச்சினைகளுக்குப் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் உரிய நிலங்கள் ஒதுக்கப்பட்டு நிலுவைச் சிக்கல்கள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

லோகேந்திரன்

தொடர்ந்து கருத்துரைத்த வாக்காளர் என். லோகேந்திரன், ‘மலேசியன் விஷன் வேலி’ திட்டத்தின் கீழ் தொழிற்துறை, தரவு மையங்கள் நிறுவப்பட்டு வருவதால் இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும், இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான தனி இலாகா மூலம் ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் நிதியுதவிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.          சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர் ஆஷா ராணி பேசுகையில், பாக்காத்தான் ஹராப்பான் அரசின் ஆதரவால் குருத்வாரா சிங் கோயில் மேம்படுத்தப்பட்டு, வைசாகியை முன்னிட்டு மக்களுக்குச் சிறப்புச் சமூக நல உதவிகள் வழங்கப்பட்டதாக நன்றியுடன் குறிப்பிட்டார்..நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடரவும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கவும் பாக்காத்தான் ஹராப்பான் வெற்றி மிக அவசியமான ஒன்றாகும். கடந்த காலச் சாதனைகளும், தொலைநோக்கு திட்டங்களும், அனுபவமிக்க வேட்பாளர்களின் அர்ப்பணிப்பும் மாநிலத்தின் சுபிட்சமான எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளமிட்டுள்ளன. நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சாணியாகத் திகழும் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்குத் தங்களின் பொன்னான வாக்குகளை அளித்து, புதிய அத்தியாயத்தைப் படைக்க 1௦௦ விழுக்காடு வாக்கை செலுத்தி மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என மக்கள் நீதி கட்சி (பி.கே.ஆர்) கேட்டுக்கொண்டுள்ளது.



Read More

Previous Post

தர்மேந்திர பிரதானுக்கு 2024-ல் எச்சரிக்கை… இன்று பதவி நீக்கம்.. நீட் விவகாரத்தில் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஆகஸ்ட் 14 முதல் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்! – Sri Lanka Tamil News

Next Post
ஆகஸ்ட் 14 முதல் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்! – Sri Lanka Tamil News

ஆகஸ்ட் 14 முதல் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin