ஷா ஆலம்: அப்பதவி தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவியில் டத்தோ ஶ்ரீ அமினுதீன் ஹரூனின் நிலை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாக PKR துணைத் தலைவர் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார்.
அமினுதீன் தொடர்ந்து மாநில நிர்வாகத்தை வழிநடத்த ஒப்புதல் அளித்த யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அவர்களுக்கு PKR கட்சி நன்றியுடன் இருப்பதாக சினார் ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் நெகிரி செம்பிலானின் மரபுகளுக்கு இணங்க இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது என்று அவர் கூறினார்.
மாநிலத்தின் சட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட மரபுசார் கட்டமைப்புகளையும் இது உள்ளடக்கியிருப்பதால், இதைத் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது. அரசியலமைப்பு மற்றும் மரபுகளில் பொதிந்துள்ள செயல்முறைகள் மூலமாக மட்டுமே முதலமைச்சர் பதவியின் சட்டப்பூர்வத்தன்மையையும் மாநில அரசின் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
நிர்வாகம் தொடர்ந்து இயங்குவதற்கு, அனைத்துத் தரப்பினரும் கலந்தாலோசனை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அமிருதின் கூறினார். சிலாங்கூர் மாநில அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (மே 4) இங்குள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் கட்டிடத்தில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.




