• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு


2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு விசேட தபால் அட்டைகளை பழைய மாணவர் சங்கம் ஊடாக வெளியிட 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.


இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியக வெளியீடாக இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கான முழுமையான நிதி அனுசரணையை 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர். 


கல்லூரியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விசேட ஞாபகார்த்த உறைகள் வழங்கப்படவுள்ளதுடன், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தபால் அட்டைகள்  இலவசமாக வழங்கப்படவுள்ளன.


 அத்துடன் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டவர்களிடையே விற்பனை செய்யப்படவுள்ள விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய  விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு தபால் அட்டைகள் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் பாடசாலையான விவேகானந்தா கல்லூரியின் சார்பில் வெளியிடப்படும் முதலாவது முத்திரைப் பதிப்பு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 மார்ச் 24ம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த முத்திரை தொடர்பான ஆவணங்களை கல்லூரி அதிபர் மூ. மூவேந்தனிடம் கையளித்த 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற


மாணவர்கள் அதற்கான அனுமதியை பெற்றனர். இந்நிகழ்விற்கு பழைய மாணவர் சங்க செயலாளர்   க. முருகானந்தனும் கலந்துகொண்டார்.




Read More

Previous Post

Pos Malaysia வின் தானியங்கி வாகனத் திட்டம்!

Next Post

மந்தைவெளி 2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை – Sri Lanka Tamil News

Next Post
மந்தைவெளி 2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை – Sri Lanka Tamil News

மந்தைவெளி 2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin