
நுவரெலியாவுக்கு செல்லும் பல முக்கிய வீதிகளில் காணப்படும் அடர்ந்த மூடுபனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும் அடர்ந்த மூடுபனி காணப்படுகின்றது.
அத்துடன், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
குறித்த வீதிகளில் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு, சாரதிகளை நுவரெலியா பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

