திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குநர் முனைவர் சொர்ணலதா, பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேராசிரியர்கள் பேசுகையில், “1986-ஆம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை விட கூடுதல் அம்சங்களோடு 2019-ஆம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வோர்கலாச்சாரம் மாறி வரும் தற்போதைய சூழலில் நுகர்வோர்கள் மிக்க எச்சரிக்கையோடு இருந்திட வேண்டும்.முறையற்ற வணிகம், கலப்படம், வரம்புமீறும் விளம்பரங்கள் ஆகியவற்றிலிருந்து நுகர்வோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும், அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்கு செல்வதற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி இது.
நோட்டீஸுக்கு பதில் வரவில்லையென்றால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உரிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம். எம்.ஆர்.பி குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பிக்கு அதிகமாக பொருட்களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரிவர வழங்காமல் இருப்பது குற்றமாகும்.
காப்பீடு நிறுவனங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் பெற முடியும்” என தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…