• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நீ எங்கள விட அழகா இருக்க..” அத்துமீறிய மாமனார்.. சித்ரவதை செய்த கணவன்.. கேரள இளம்பெண்ணுக்கு ஷார்ஷாவில் நேர்ந்த கொடூரம்!

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“நீ எங்கள விட அழகா இருக்க..” அத்துமீறிய மாமனார்.. சித்ரவதை செய்த கணவன்.. கேரள இளம்பெண்ணுக்கு ஷார்ஷாவில் நேர்ந்த கொடூரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அண்மையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் கேரள பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. திருமணமான உடன் கணவரை நம்பி வெளிநாடு நாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபன்சிகா மணியன். 32 வயதான இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. விபின்சிகாவுக்கு தந்தை இல்லாதபோதும் அவரின் தாயார், தனது சக்திக்கு மீறி வரதட்சணையாக நகைகள் மற்றும் பணம் கொடுத்து மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். நிதிஷ் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருடன், அவரின் தந்தை மற்றும் தங்கை நீத்து பென்னியும் உடன் இருந்துள்ளனர். திருமணமான சில நாட்களில் மனைவி விபன்சிகாவையும், ஷார்ஜாவுக்கு நிதின் அழைத்துச் சென்றுள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபன்சிகா தனது மகளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விபன்சிகாவின் தாயார் ஷியாமளா, கொல்லத்தில் உள்ள குந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு, அவரின் கணவர் நிதிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, விபன்சிகா அழகாய் இருப்பது கணவர் குடும்பத்தினரின் கண்களை உறுத்தியுள்ளது. தாங்கள் கறுப்பாக இருக்கையில் நீ மட்டும் எப்படி வெள்ளையாய் இருக்கலாம் என அடித்து உடலில் காயப்படுத்தியுள்ளனர். கொடூரத்தின் உச்சமாக விபன்சிகாவின் தலைமுடியை வெட்டியதுடன், மொட்டையும் அடித்து விட்டுள்ளனர்.

இதையடுத்து, தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை சகித்துக் கொண்ட இளம்பெண், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும் கொதித்தெழுந்துள்ளார். அதுகுறித்து, கேள்வி கேட்டதற்காக கணவர் நிதிஷ் விவாகரத்து நோட்டீஸ் வழங்கியதாகவும் விபன்சிகாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கணவர் நிதிஷ் மற்றும் அவரின் தங்கை நீத்து பென்னி, தந்தை மீது குந்தாரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, தற்கொலை முடிவுக்கு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என விபன்சிகா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் மட்டும் இன்றி அவரின் தந்தையும் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுகுறித்து கணவரிடம் புகார் கூறியதற்கு, அவர் சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்.. சகோதரிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது!

உன்னை தனக்கு மட்டும் இன்றி, தனது தந்தைக்காகவுமே திருமணம் செய்ததாக கூறி கதிகலங்க வைத்துள்ளார். மேலும், ஆபாச படங்களை பார்த்து, தன்னை பாலியல் ரீதியாகவும் கணவர் கொடுமைப் படுத்தியதாகவும் அப்பாவிப் பெண் குறிப்பிட்டுள்ளார்.  மொத்தத்தில் தன்னை ஒரு நாயை போன்று நடத்தியதால், வேறு வழியின்றி விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விபன்சிகா தெரிவித்துள்ளார்.

தன்னை இந்த நிலைக்கு தள்ளிய கணவன் மற்றும் அவரின் தங்கை, தந்தையை விட்டுவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் அடிப்படையிலும் மூன்று பேரையும் கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடந்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரள இளம்பெண் தனது மகளை கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

———–

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

———

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 16, 2025 5:44 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“நீ எங்கள விட அழகா இருக்க..” அத்துமீறிய மாமனார்.. சித்ரவதை செய்த கணவன்.. கேரள இளம்பெண்ணுக்கு ஷார்ஷாவில் நேர்ந்த கொடூரம்!

Read More

Previous Post

கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு

Next Post

‘அவசியமின்றி இதனை செய்ய வேண்டாம்..’ – இந்திய குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்ட மத்திய அரசு..

Next Post
‘அவசியமின்றி இதனை செய்ய வேண்டாம்..’ – இந்திய குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்ட மத்திய அரசு..

‘அவசியமின்றி இதனை செய்ய வேண்டாம்..’ - இந்திய குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்ட மத்திய அரசு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin