• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நீ அழகாக இல்லை..” கேலி பேசிய மாமியார்.. டார்ச்சர் கொடுத்த கணவன்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“நீ அழகாக இல்லை..” கேலி பேசிய மாமியார்.. டார்ச்சர் கொடுத்த கணவன்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 7:27 PM IST

பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி சாப்ட்வேர் இன்ஜினியர் ஷில்பா தற்கொலை செய்தார்.

Rapid Read
ஷில்பா - பிரவீன்ஷில்பா - பிரவீன்
ஷில்பா – பிரவீன்

பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுட்டகுண்டேபல்யா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், ஆரக்கிள் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஷில்பா என்பவருடன் பிரவீனுக்கு திருமணம் நடைபெற்றது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஷில்பாவும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களின் திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்கிய தம்பதிக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐடி ஊழியரான பிரவீன் வேலை பறிபோயுள்ளது.

முன்னதாக குடும்பத்தை கவனிப்பதற்காக ஷில்பாவும், தனது வேலையை விட்டுள்ளார். இருவருக்கும் வேலை இல்லாத நிலையில் பானி பூரி கடையை பிரவீன் நடத்தியுள்ளார். தொழிலை மேம்படுத்துவதற்காக மனைவியிடம் மேலும் 5 லட்சம் ரூபாய் உங்களது வீட்டில் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஷில்பா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷில்பாவின் தாயார் சாரதா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக கூடுதல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வாங்கி வா என ஷில்பாவின் மாமியார் சந்தாவா குடைச்சல் கொடுத்ததாக கூறியுள்ளார். 6 மாதத்துக்கு முன்பு கேட்ட 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பிறகும், தொடர்ந்து தனது மகளை அவமானப்படுத்தியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பேரன் தலையை துண்டித்து நரபலி.. தாத்தா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.. விசாரித்த போலீசார் ஷாக்!

குறிப்பாக, தனது மகளின் நிறம் குறித்து கேலி பேசிய மாமியார், நீ தனது மகனுக்கு சரியான ஜோடி இல்லை என்று குத்திக் காட்டியதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மாமியார், உன் வீட்டில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வா அல்லது, வேறொரு பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் ஷில்பா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில் வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், கர்ப்பிணியின் கணவன் பிரவீன் மற்றும் மாமியார் சந்தாவா ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணியாக இருந்த சாப்ட்வேர் இன்ஜினியர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

August 29, 2025 7:26 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“நீ அழகாக இல்லை..” கேலி பேசிய மாமியார்.. டார்ச்சர் கொடுத்த கணவன்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!

Read More

Previous Post

Tamilmirror Online || நானுஓயா நாய் விவகாரம்: இளைஞனுக்கு நீதிமன்ற தீர்ப்பு

Next Post

உயிரை உலுக்கும் காட்சி – ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டுகள்

Next Post
உயிரை உலுக்கும் காட்சி – ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டுகள்

உயிரை உலுக்கும் காட்சி - ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin