நீல் மோகன் ட்விட்டரில் இணைவதைத் தடுக்க, கூகுள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. ஏனென்றால் அவரது முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் ட்விட்டரில் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். நீல் மோகனை தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க விரும்பினார்.
இருந்தாலும் இந்த 100 மில்லியன் டாலர் தகவல் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீல் மோகனிடம், “வேலையை விட்டுவிடாமல் இருக்க கூகுள் உங்களுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக படித்தது எனக்கு நினைவிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது மிகப் பெரிய தொகையாக இருந்திருக்குமே” எனக் கேட்டார். இந்தக் கூற்றை நீல் மோகன் மறுக்கவில்லை.

