• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீலகிரியிலிருந்து டைமிற்கு சந்தை செல்லும் காய்கறிகள்… வியக்க வைக்கும் லாரி டிரைவர்கள்…

GenevaTimes by GenevaTimes
August 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நீலகிரியிலிருந்து டைமிற்கு சந்தை செல்லும் காய்கறிகள்… வியக்க வைக்கும் லாரி டிரைவர்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு முக்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு ஏராளமான மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் ஆகியவை அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிக அளவில் மேட்டுப்பாளையம், மதுரை, சென்னை, பெங்களூர், திருச்சி ஆகிய பகுதிகளுக்குச் சந்தைப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. காய்கறிகள் லாரிகளின் மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுவையான காய்கறிகளை ருசி பார்க்கிறோம். ஆனால் அதன் பின்னர் உழைக்கும் ஊழியர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளவர்கள் லாரி ஓட்டுநர்கள். அப்படி நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரட் ஏற்றி புறப்படும் லாரிகள் சரியாக எட்டு மணி நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை சென்றடைகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: கேரளாவிற்கு வாங்கிச்செல்லப்படும் வாழைத்தார்கள்… வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு…

இதேபோல் நீலகிரியிலிருந்து பெங்களூர் செல்ல 6 மணி நேரம் தேவைப்படுகிறது. காய்கறிகளைச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்வதற்காக உயிரைப் பணயம் வைத்துப் பறக்கின்றனர் லாரி ஓட்டுநர்கள்.

வசதி இருந்திருந்தால், நன்கு படித்திருந்தால் அலுவலகப் பணிகளுக்குச் சென்று இருப்போம். ஏழ்மையின் காரணமாக டிரைவர் தொழிலுக்கு வந்தோம். ஒரு நாள் இரவு பகல் கண்விழித்துப் பசி மறந்து வாகனம் ஓட்டினால் மட்டுமே ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். இதை நம்பியே வாழ்வாதாரம் நடத்த வருகிறோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் பலருக்கும் எளிமையான தொழிலாகத் தெரிந்தாலும் வெளியில் தெரியாத உடல் சோர்வு, வலி மற்றும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் உள்ளது. ஆனால் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். வாகனம் ஓட்டும் பொழுது சாலையின் இரு புறங்களிலும் கவனித்து வாகனத்தை இயக்குகின்றோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ மலர்… நீலகிரியில் மலர்ந்த பிரம்ம கமலம்…

இதுகுறித்து லாரி ஓட்டுநர் வெங்கடேஷ் கூறுகையில், “நான் 15 வருடங்களாக லாரி டிரைவராக உள்ளேன். சரியாக உணவு இருக்காது சரியான தூக்கம் இருக்காது. இங்கிருந்து சென்னை வரை செல்ல வேண்டும் எனில் இடையில் டீ குடிப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஊட்டியிலிருந்து பெங்களூர் சென்று வந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் அதிக அளவில் கஷ்டம் உள்ளது.

விளம்பரம்

மேலும் சென்னைக்குச் செல்வதற்கு 10 மணி நேரமும் பெங்களூர் செல்வதற்கு 7 மணி நேரமும் குறைந்தபட்சம் தேவைப்படுகிறது. திரும்பி வரும்பொழுது நிதானமாக வரலாம். ஆனால் காய்கறிகளை ஏற்றும் பொழுது விரைவாகச் செல்ல வேண்டி உள்ளது எனத் தெரிவித்தார். மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டி பழகியதால் சுலபமாக உள்ளது” எனவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

நடப்பாண்டில் இதுவரை ரூ.3,225 கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை: தமிழக அரசு | 9.63 lakh metric tones of agricultural produce worth Rs 3,225 crore traded so far this year: Govt

Next Post

“வன்முறை, குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பீர்” – வங்கதேச மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள் | Save the country from violence, chaos: Yunus

Next Post
“வன்முறை, குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பீர்” – வங்கதேச மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள் | Save the country from violence, chaos: Yunus

“வன்முறை, குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பீர்” - வங்கதேச மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள் | Save the country from violence, chaos: Yunus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin