மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

