பொந்தியான்:
கடந்த மூன்று நாட்களாக இங்குள்ள இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தற்போது முழுமையாக வடிந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஒரே தற்காலிக நிவாரண மையம் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.
செக்கோலா கெபாங்சான் பெனெரோக்கில் உள்ள நிவாரண மையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அதன் செயல்பாடுகளை நிறுத்தியதை ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.
அங்கு 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 குடியிருப்பாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜோகூரில் உள்ள அனைத்து ஆறுகளும் தற்போது எச்சரிக்கை அல்லது எச்சரிக்கை அளவை விட குறைவாக இருப்பதாக அஸ்மான் ஷா மேலும் கூறினார்.
மேலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வானிலை தெளிவாகவும் சீரானதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.




