• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீதியின் ஓலம் – நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம்

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நீதியின் ஓலம் – நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையொப்ப போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி நான்காவது நாளாக இன்று நடைபெற்று வருகின்றது.



செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பல புதைகுளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் – சிறுவர்கள், பெண்கள் உட்பட – சித்திரவதை செய்து, படுகொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டு வருகின்றனர். 


மேலும் பல புதைகுழிகள் அடையாளங் காணப்பட்ட நிலையில் இன்னும் தோண்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

மாபெரும் கையொப்ப போராட்டம்

இவ்வாறு, 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் சுதந்திரம், இறையாண்மை பறிக்கப்பட்டு இன்றுவரை இலங்கைத் தீவில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகத்தை விட்டு அச்சுறுத்தலின் பால் வெளியேற்றப்பட்டதோடு,

தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு மற்றும் பண்பாட்டு அழிப்புக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. 


நீதியின் ஓலம் - நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | The Great Signature Campaign

இவ்வாறு நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டுத் தலையீட்டுடன் கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க பன்னாட்டுப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, 

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையொப்ப போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி நான்காவது நாளாக இன்று நடைபெற்று வருகின்றது. 

தமிழர் தாயகம்

வடக்குக்கிழக்கு எங்கும் எமது தாயக மக்கள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் தங்களது கையெழுத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றார்கள்.

நீதியின் ஓலம் - நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | The Great Signature Campaign

ஐந்து நாள் கொண்ட கையொப்பப் போராட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டு, எதிர்வரும் 28.08.2025 இலட்சக்கணக்கான கையொப்பங்களுடன் நிறைவடைய உள்ளது. 


நீதிக்கான இந்த மாபெரும் கையொப்ப போராட்டம் அனைத்து மட்டங்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழர் தாயகம் முழுவதும் எமது மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அலை அலையாகத் திரண்டு வந்து தமது கையொப்பங்களை இட்டு சர்வதேச நீதியைக் கோருகின்றார்கள். 


இந்தப் போராட்டமானது தாயகச் செயலணி என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

காசாவில் சக ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டதில் பத்திரிகையாளர்களின் மௌனத்தை ஐ.நா. அறிக்கையாளர் கண்டிக்கிறார் – Malaysiakini

Next Post

ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…! | இந்தியா

Next Post
ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…! | இந்தியா

ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்... நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்...! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin