• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீதிமன்றத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணக்காரர்களின் புதிய ரூட்.. 2 வருடத்தில் 41% லாபமாம்! | How India’s Super-Rich Are Earning 41% Returns by Funding Court Cases: Inside Litigation Funding

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நீதிமன்றத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணக்காரர்களின் புதிய ரூட்.. 2 வருடத்தில் 41% லாபமாம்! | How India’s Super-Rich Are Earning 41% Returns by Funding Court Cases: Inside Litigation Funding
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீதிமன்றத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணக்காரர்களின் புதிய ரூட்.. 2 வருடத்தில் 41% லாபமாம்!

பெரும் பணக்காரர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எப்போதும் முதலீடு செய்ய புதிய வழிகளையும், இடங்களையும் தேடுவது வழக்கம். இந்த தேடல் தான் பலருக்கு பெரும் லாபம் தரும் முதலீட்டு வாய்ப்பை பெற்றுத் தரும். இப்படி தற்போது பெரும் பணக்காரர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வழி இந்திய நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் 5.4 கோடி வழக்குகள்.

பொதுவாகச் சட்ட வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பணம் மற்றொரு தரப்பிடம் சிக்கியிருக்கும். இது சொத்து பிரச்சனை முதல் நிறுவனத்தால் கொடுக்கப்படும் நஷ்டஈடு வரையில் அனைத்திலும் இதே கதை தான்.

 நீதிமன்றத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணக்காரர்களின் புதிய ரூட்.. 2 வருடத்தில் 41% லாபமாம்!

தற்போது பிரச்சனை என்னவென்றால் அந்தப் பணத்தைப் பெறுவதற்குப் பல ஆண்டுகள் வழக்கை நடத்த வேண்டும், அதற்குத் தேவையான சட்டச் செலவை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரால் செலவு செய்ய முடியாத சூழல் ஏற்படும். இந்த இடைவெளி தான் தற்போது பெரும் பணக்காரர்களின் முதலீட்டு மைதானமாக மாறியுள்ளது.

இதற்காக Litigation Funding அல்லது வழக்கு நிதியுதவி என்ற புதிய துறையே தற்போது உருவாகியுள்ளது. இந்த முதலீட்டு முறையில், முதலீட்டாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேறு ஒருவரின் வழக்குக்கான சட்டச் செலவுகளை ஏற்பார்.

இந்த வழக்கில் வெற்றி பெற்றால், இதிஸ் கிடைக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை முதலீட்டாளர் பெறுவார். இதுவே தோல்வி அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான லாபம் கிடைக்காது, மாறாக நஷ்டம் மட்டுமே கிடைக்கும்.

இத்தகைய வழக்குகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டுமாயின் பலமான வழக்கறிஞர்கள் குழு தேவை. 10 வழக்கில் 2 தோல்வி அடைந்தாலும் 8ல் வெற்றி பெறுவது மூலம் பெரும் பணக்காரர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், பணக்காரர்களின் குடும்ப அலுவலகங்கள் இத்தகைய முதலீட்டின் வாயிலாக ரிஸ்க் எடுத்து பெரும் லாபத்தைச் சம்பாதிக்கின்றனர்.

இந்தியாவில் LegalPay மற்றும் FightRight போன்ற நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த மாதிரியான முதலீட்டு முறையைச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 5 Rivers Capital என்னும் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியில் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் Litigation Fund ஆக உருவானது.

உதாரணமாக LegalPay தனது முதலீட்டாளர்களுக்கு 30%-க்கும் அதிகமான IRR கிடைத்துள்ளதாகக் கூறுகிறது. இத்தகைய முதலீட்டில் முக்கியமான ஆபத்து வழக்கில் தோல்வி அடைவது மட்டுமல்ல, முதலீடு செய்யத் தேர்வு செய்யப்படும் வழக்கு முடிய எவ்வளவு காலம் ஆகிறது என்பது தான் மிகப்பெரிய ஆபத்து.

ஒரு வழக்கு தேர்வு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முடிந்தால் அதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வருடாந்திர வருமானம் சுமார் 41% லாபமாகும். அதே வருமானம் அந்த வழக்கு முடிய 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் வருடாந்திர அடிப்படையிலான வருமானம் 7% மட்டுமே. இதனால் வழக்குகள் முடியும் நேரம் லாபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் ஒரு வழக்கு முடியச் சட்ட ரீதியான போராட்டத்தைத் தாண்டி அவுட் ஆஃப் கோர்ட்-ல் நடைபெறும் செயல்முறையும் முக்கியமானதாக இருக்கிறது.

இத்தகைய முதலீட்டில் பெரும் ரிஸ்க் இருக்கும் இதேவேளையில், இதை முறையான முதலீட்டுச் சந்தையாக மாற்றும் நோக்கில் 5 Rivers Capital போன்ற நிறுவனங்கள் செபியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இத்துறைக்கு ஒழுங்குமுறை விதிமுறைகள் உருவாக்கப்பட்டுச் சிறு முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

Share This Article

English summary

How India’s Super-Rich Are Earning 41% Returns by Funding Court Cases: Inside Litigation Funding

How India’s Super-Rich Are Earning 41% Returns by Funding Court Cases: Inside Litigation Funding — நீதிமன்றத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணக்காரர்களின் புதிய ரூட்.. 2 வருடத்தில் 41% லாபமாம்!

Story first published: Sunday, September 27, 2026, 21:10 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

ஓடிப்போன வேட்பாளர்.. மரகதம் குமரவேல், சத்தியபாமா நல்லவர்களா? எடப்பாடி பழனிசாமி தாக்கு! | Edappadi Palaniswami Slams TVK Bypoll Candidates as “Defectors”, Attacks CM Vijay Praise

Next Post

கெடா மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ரேபிஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு – Malaysiakini

Next Post

கெடா மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ரேபிஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin