மும்பை நகரிலுள்ள தாதர் பகுதியில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு கவாய் பேசினார். இச்சம்பவம் வழக்குரைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தலைமை நீதிபதி கவாய், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், புத்த மதத்தைத் தழுவியவர் என்பதாலும் அவருக்கு அரசுத் தரப்பில் உரிய மரியாதையுடன் கூடிய அழைப்பு தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதியை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு முதல்முறை மகாராஷ்டிரத்திற்கு வந்த பி.ஆர். கவாய்க்கு மும்பை விமான நிலையத்தில், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் மற்றும் மும்பை காவல் துறை ஆணையர் ஆகியோர் உரிய முறையில் வரவேற்பு அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

