கோலாலம்பூர்,
நீதித்துறை நியமனக் குழு (JAC) மே மாத கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்கள் சமூக ஊடகங்களில் லீக் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் டத்தோ : தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் எந்த அவசர விடயத்தையும் பரிசீலிக்க உணர்வுடனும் கவனத்துடனும் இருக்கிறார். எனவே இது அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது,” என்று இன்று நடைபெற்ற AI தொழிநுட்ப நிகழ்வு ஒன்றின் தொடக்க விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறினார்.
இந்த தகவல் கசிவு, புதிய நீதியரசர்கள் நியமனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சி நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டது. இதனால் 9 அரசாங்கம் சார்ந்த உறுப்பினர்கள் அரசரின் தலைமையில் விசாரணைக் குழு (Royal Commission of Inquiry) அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களில் ஒருவர் முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி ஆவார். அவர் இந்த விவகாரம் 2007ஆம் ஆண்டு நடந்த நீதியரசர்கள் நியமன விவகாரம் போலவே இருந்ததாகக் கூறினார்.
தற்போது அரசு மற்றும் சட்டத்துறை பிரதிநிதிகள் இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் பிரதமர் அன்வார் இச்சம்பவம் குறித்து நாளை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசாரணை நடத்தவுள்ளார்.
The post நீதித்துறை நியமனக் குழு கூட்ட முடிவுகள் விவரங்கள் வெளியானது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

