குறிப்பாக வங்கிகள் நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. உதாரணமாக, மூன்று ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களை, ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துடன் ஒப்பிடும் போது 3 ஆண்டு திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் மிக முக்கிய வங்கிகள் மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
இந்த பிரபல தனியார் வங்கி மூன்று வருட FD-க்கு 6.45% வட்டி வழங்குகிறது. அதேசமயம் 1 வருட FD-க்கு 6.25% மற்றும் 2 வருட FD-க்கு 6.45% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 25, 2025 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 பேஸிஸ் பாயின்ட்ஸ் (6.95% வட்டி) வழங்கப்படுகிறது.
இந்த தனியார் வங்கி 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.6% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது. ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, முதலீட்டாளர்கள் முறையே 6.25% மற்றும் 6.4% வட்டியை பெறுவார்கள்.
இந்த வங்கி மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.4% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.90% வட்டியையும் வழங்குகிறது. ஒரு வருட மற்றும் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, கோடக் மஹிந்திரா வங்கியானது முறையே 6.25% மற்றும் 6.4% வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 20 முதல் அமலுக்கு வந்தன.
இந்த வங்கி ஆகஸ்ட் 18, 2025 அன்று அமலுக்கு வந்த வட்டி விகிதங்களின்படி ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.4%, 6.5% மற்றும் 6.5% வட்டியை வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு 6.3% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.8% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 15, 2025 அன்று அமலுக்கு வந்தன. 1 வருடம் மற்றும் 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 6.25% மற்றும் 6.45% வட்டியை பெறுவார்கள்.
இந்த வங்கி 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7% வட்டியையும் வழங்குகிறது. அதே நேரம் 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு ஒரு வருட மற்றும் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 6.25% மற்றும் 6.5% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 12 முதல் அமலுக்கு வந்தன.
இந்த வங்கி மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 60 வயதிற்குட்பட்ட குடிமக்களுக்கு 6.6% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது. அதே நேரம் 1 வருடம் மற்றும் 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு முறையே 6.4% மற்றும் 6.5% வட்டியை இந்த வங்கி வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 20, 2025 அன்று அமலுக்கு வந்தன.
October 11, 2025 7:02 AM IST

