• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் | Dharmendra Pradhan slams Congress, says it wants to run away from discussion in Parliament

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் | Dharmendra Pradhan slams Congress, says it wants to run away from discussion in Parliament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சண்டிகர்: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.

சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து தப்பிக்கவே விரும்புகிறது. சீராக போய்க்கொண்டிருக்கும் நிறுவன கட்டமைப்பின்மீது அதிருப்தியை, குழப்பத்தை, தடையை உருவாக்குவது மட்டுமே அக்கட்சியின் நோக்கம்.

குடியரசுத் தலைவரும்கூட இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கிறார். இதில் (நீட் தேர்வில்) சவால்கள் மற்றும் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அரசு சார்பில், எந்த விதமான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நான் தெளிவாகக் கூறி இருக்கிறேன். ஆனால், மாணவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது காங்கிரஸின் விருப்பமல்ல, மாறாக இந்த விவகாரம் பற்றி எரிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகள் (வினாத்தாள் கசிவு) 2014 க்கு முன்பே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதற்காக, அதனை நான் நியாயப்படுத்த முடியாது. தேசிய தேர்வு முகமைக்கு புதிய தலைமை கிடைத்துள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், இந்த விவகாரம் குறித்த வழக்கு முழுவதும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் நேற்று (ஜூன் 28) அறிவிக்கப்பட்டன. நீட்-பிஜிக்கான புதிய தேதிகள் திங்கள் அல்லது செவ்வாய்க்குள் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.



Read More

Previous Post

Tamilmirror Online || காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி மீட்பு

Next Post

கோலி மிரட்டல், அக்சர் அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு | T20 WC Final | india scored 176 runs against south africa in t20 world cup final match

Next Post
கோலி மிரட்டல், அக்சர் அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு | T20 WC Final | india scored 176 runs against south africa in t20 world cup final match

கோலி மிரட்டல், அக்சர் அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு | T20 WC Final | india scored 176 runs against south africa in t20 world cup final match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin