Last Updated:
ஈரான் உடனான நேரடி பேச்சுவார்த்தையில், இந்திய எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த 20 கப்பல்கள் உட்பட 22 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அந்நாடு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்கள் போன்றவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி உள்ளிடோர் பங்கேற்றனர். போதுமான எரிபொருள் இருப்பை உறுதி செய்ய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதால் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரசாயனங்கள், மருந்துகள், பெட்ரோலிய ரசாயனங்களின் இறக்குமதி ஆதாரங்களை பரவலாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. பின்னர், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க பிரத்யேக குழு அமைக்க அறிவுறுத்திய பிரதமர், பதுக்கலை தடுக்க மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறுவுத்தினார்.
இதற்கிடையே, ஈரான் உடனான நேரடி பேச்சுவார்த்தையில், இந்திய எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த 20 கப்பல்கள் உட்பட 22 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அந்நாடு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


